அன்பு வாசகர்களுக்கு, தற்போதுள்ள மீம்ஸ் வகையறாக்கள், புத்தகம் மற்றும் செய்தித்தாள் வாசிக்க நேரமில்லா நண்பர்களுக்கு, சில நொடிகளிலேயே முக்கிய சமூக நிகழ்வுகளை வேடிக்கையாகவும், அழுத்தமாகவும் கூறி விடுகிறது. இவை பெருந்தொற்று காலத்தில் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதும் வீட்டில் இருத்தல்,விலகி இருத்தலின் மனஇறுக்கத்தை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது. "உடல் ஆரோக்கியத்திற்கு அறுசுவை, மன ஆரோக்கியத்திற்கு நகைச்சுவை" என்பதற்கேற்ப, இந்த சிரி சிரி மீம்ஸ் பகுதியில், வாராவாரம் சற்று நகைச்சுவையுடன் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் வகையில் எனது நண்பர் உருவாக்கிய மீம்ஸ் இடம்பெறும். இந்த வார சமூக நிகழ்வுகளுள் சில உங்களுக்காக!!!!!! (இவை யார் மனதையும் புண்படுத்தவதற்காக அல்ல) #கொரோனா பரிதாபங்கள் #வெள்ளக்காடாகும் சென்னை மாநகரம் ...