இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிரி சிரி மீம்ஸ்

படம்
 அன்பு வாசகர்களுக்கு, தற்போதுள்ள மீம்ஸ்  வகையறாக்கள், புத்தகம் மற்றும் செய்தித்தாள் வாசிக்க  நேரமில்லா  நண்பர்களுக்கு,  சில நொடிகளிலேயே முக்கிய சமூக நிகழ்வுகளை  வேடிக்கையாகவும், அழுத்தமாகவும் கூறி விடுகிறது. இவை பெருந்தொற்று காலத்தில் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதும்  வீட்டில் இருத்தல்,விலகி இருத்தலின் மனஇறுக்கத்தை  குறைத்ததும்  குறிப்பிடத்தக்கது. "உடல் ஆரோக்கியத்திற்கு அறுசுவை, மன ஆரோக்கியத்திற்கு  நகைச்சுவை" என்பதற்கேற்ப, இந்த சிரி  சிரி மீம்ஸ் பகுதியில், வாராவாரம் சற்று நகைச்சுவையுடன்  சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் வகையில் எனது நண்பர் உருவாக்கிய  மீம்ஸ் இடம்பெறும். இந்த வார சமூக நிகழ்வுகளுள் சில உங்களுக்காக!!!!!!  (இவை யார் மனதையும் புண்படுத்தவதற்காக அல்ல) #கொரோனா பரிதாபங்கள்  #வெள்ளக்காடாகும் சென்னை மாநகரம்                                                                                                                                                                                         நன்றி: PS 

புத்தகப் பார்வை ஓர் மு(அ)கவரி

 அன்பு வாசகர்களுக்கு வணக்கம், எனக்கு தமிழ் மொழியில் முதன்மை ஈடுபாடு வந்ததற்கு முதற்காரணம் புத்தக வாசிப்பு. என் ஞாபகபுழக்கத்தில் சிறுவயது பழக்கமாய் சிறுவர்மலரில் ஆரம்பித்து, வளர வளர இலக்கியம்,அறிவியல் சார்ந்த புத்தகங்கள் என்னை ஈர்த்தது .சரித்திர நாவல்கள் மனித நாகரிகத்தின் மூத்த குடியாகிய பண்டைய தமிழ் சமூகத்தையும், அதன் பெருமைகளையும், பேருண்மைகளையும்  விலாசப்படுத்தின.புத்தகத்தோடு கற்பனைகளில் என்னை நானே மூழ்கடித்து கொள்வது பிடித்த பொழுதுபோக்காய் இருந்தது .ஓவ்வொரு  புத்தகமும் என்னுள் அதீத  தாக்கத்தை ஏற்படுத்தியது மறுக்கமுடியாத உண்மை. தமிழ் வழி புத்தக அறிவியலார்வம்  என்னை முதுநிலை உயிரி தொழில்நுட்பவியல் பட்டதாரியாக்கியது  என்பது பின்னாளில் தெரிந்தது. எத்தனை வருடங்களானாலும் புத்தகம் மீது உள்ள காதல் குறையவே இல்லை. முனைவர் பட்டப்படிப்பு ஆராய்ச்சியில் இருக்கும்போதுகூட மீண்டும் ஓர்  புது புத்தகத்தின் வாசனையையே  மனம் தேடுகிறது.ஒவ்வொரு புத்தகமும் அகவாழ்வும் புறவாழ்வும் இணைந்த ஓர் விந்தை  உலகம்.வாசிப்பாளர்கள் அதன் குடிமக்கள். ஓர்  வாசிப்பாளனின் பரவலான  புத்தகப்பார்வையை வெவ்வேறு கோணங்களில்  பன்முக ச