இடுகைகள்

என் பார்வையில் புத்தகம்-3: கல்வெட்டுகள்

படம்
பதினொன்று பதிப்புகளைக் கண்ட வைரமுத்து அவர்களின் இந்த நூல், 15 தலைப்புகள் கொண்ட கட்டுரைகளை உள்ளடக்கியது.தலைப்புகளை வாசித்தாலே முழுதும் வாசிக்கும் ஆசை பிறக்கிறது. உங்கள் பார்வைக்காக தலைப்புகள்: 1.தமிழ் கூறு நல்லுலகு 2.எழுத்தும் எழுத்தாளரும் 3.புது கவிதையின் பாடுபொருள் 4.சந்திப்பும் சிந்திப்பும் 5.எனது பார்வையில் கண்ணதாசன்,  6.பட்டிக்காட்டு குயில்கள் 7.தாமத ஞானம் 8.தெலுங்கு பாரதி 9.அந்தி மந்தாரைகள் 10.ஓ மனிதனே! 11.இவர்களை பிறப்பேனா? 12.கவி வாசகம் 13.பாரதியின் பின்புலங்கள் 14.கண்ணீரை சிரிக்க விடுவோம் 15.மாறும் யுகங்கள் மாறுகின்றன  உயரம் சென்ற மனிதர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்காமல் நினைவு கொண்டு பகிர்வது அரிது. அவ்வாறு கூற வேண்டுமென்றால்  சிலவற்றை பகிர்ந்து பலவற்றை மறைக்கும் நிலை வரும் என்பதால், பெரும்பாலானோர் அது குறித்து எழுத தயங்குவர்.இருப்பினும், இப்புத்தகம் ஆசிரியரின் வாழ்கை வரலாறு மட்டுமில்லாமல், சில சுவாரசிய சந்திப்புகளை, தான் கடந்து வந்த பாதைகளை, சந்தித்த மனிதர்களை, நேசித்த கருத்துக்களை, வியந்த சரித்திர  நாயகர்களை வெளிச்சத்தில் பகிரும் பெருமுயற்சி. கட்டுரை வடிவின் முக்கிய அங

அடுத்த பார்வை முன்னோட்டம்:புத்தகம்-3

படம்
 புத்தகம்: கல்வெட்டுகள்  ஆசிரியர்: திரு.வைரமுத்து  வெளியீடு: சூர்யா லிட்ரேட்சர்  (பி) லிட் 

சிரி சிரி மீம்ஸ்-2

படம்
இந்த வார சமூக நிகழ்வுகள் உங்களுக்காக!!!! (இவை யார் மனதையும் புண்படுத்தவதற்காக அல்ல) #பள்ளிகள் திறப்பு குறித்து  பெற்றோர்களிடம் கருத்து கேட்பு-TN அரசு   #மதுரையில் பலே சீர்வரிசைகளுடன் நிகழ்ந்த திருமணம்   #பெருந்தொற்று இரண்டாம் அலை இருக்க வாய்ப்பு  #அமெரிக்க அதிபர் தேர்தல்:  தேர்தல் தோல்வி அதிபர் டிரம்ப்  மறுப்பு                                                                                                                                                                                                                                                                                                                                                                            நன்றி: PS 

என் பார்வையில் புத்தகம்-2: "சிக்மண்ட் ஃபிராய்ட்:கனவுகளின் விளக்கம்"

படம்
 உலகை மாற்றிய 5 புத்தகங்களில் ஒன்றாகிய சிக்மண்ட் ஃபிராய்ட்:கனவுகளின் விளக்கம் மொழிபெயர்ப்பை நான் படிக்க நேர்ந்தது. புத்தக கண்காட்சியில், கனவுகளின் விளக்கம் என்ற தலைப்பே என்னை  இந்த புத்தகத்தை வாங்க வைத்தது. அப்படி வாங்கும்போது சிக்மண்ட் அவர்கள் குறித்தோ அல்லது அவரின் கருத்தாக்கம் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. கனவு பற்றி அறிவியல் பூர்வமாக அறிய போகிறோம் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது. ஏனென்றால்,கனவுகள் அழகானவை. ஆழமானவை. சிலசமயம் நம்மை குதூகலப்படுத்தும். பலசமயம் நம்மை குழப்பும். நனவில் நடக்காத நிகழ்வுகள் கனவில் சர்வ சாதாரணமாய் நிகழும்.அதற்கு மாயாஜால உலகம் என்று கூறினால் பொருந்தும். இந்த நிலையில்லாத கனவுகள் காலையில் எழுந்ததும் மறைந்து விடும் அல்லது மறந்தும் விடும்.  என்னை பொறுத்தவரை கனவு நிஜங்களின்  நிழல். நனவு வாழ்க்கையின் எச்சம். கனவுகளுக்கு பொருள்  காண்பது ஜோதிடம் போலவே நம் அனைவர்க்கும் பழக்கப்பட்டது, வழி வழியாக பழக்கப்படுத்தப்பட்டது. அறிவியல் பூர்வமாக, உறங்கும்போது மூளையின் விழிப்பு நிலை காரணமாக கனவுகள் தோன்றுகின்றன  என்று நாம் அறிவோம். உளவியலில்  ஒருபடி மேலே போய் கனவு குறித்து முற்ற

அடுத்த பார்வை முன்னோட்டம்:புத்தகம்-2

படம்
 மொழிபெயர்ப்பு புத்தகம்: "சிக்மண்ட்  ஃ பிராய்ட்:கனவுகளின் விளக்கம்"   மொழி பெயர்த்தவர்: திரு.நாகூர் ரூமி   பதிப்பகம்: சிஸ்த்சென்ஸ் பப்லிகேஷன்ஸ்   

என் பார்வையில் புத்தகம்-1:தண்ணீர் தேசம்

படம்
முதற்புத்தகப்பார்வைக்கு எனது தேர்வு வைரமுத்து ஐயா அவர்கள் எழுதிய கவிதை வடிவில் ஓர் அற்புத அறிவியல் புதினம், தண்ணீர் தேசம்.  ஏனெனில், இந்த  புத்தகத்தை எண்ணற்ற முறை வாசித்தது மட்டுமல்லாது, தமிழ் புனைவுகளில் சற்று வித்தியாசமாக காதலையும் கடலையும் ஒரே சீராக கதைக்களமாக உட்படுத்தியதும்தான்.   இந்த  அருமையான புத்தகம் குறித்து கூற வேண்டுமென்றால் 1996இல் இருந்து 2018 வரை இருபத்தைந்து பதிப்புகள், 24 உட்பகுதிகள் கொண்டது. அட்டைப்படம்  நீல திரைக்கடலை பிரதிபலிக்கிறது.  அறிவியலும் அரசியலும் தமிழ்  இலக்கியத்திற்கு புதிதில்லை என்றாலும், நவீன தமிழ் இலக்கியத்தில் பகுத்தறிவு காதலையும், தமிழ்வழி அறிவியலையும் இந்நூல் ஆவணப்படுத்துகிறது. பண்டைய தமிழ் இலக்கியத்தில் மறைபொருளாக அறிவியல் இருந்தபோதிலும் பெரும்பான்மையான நூல்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை. தமிழ் கவினர்களின்  நூல்களை மட்டுமல்லாது, வானசாஸ்திரம் மற்றும் கட்டடக்கலைகலாகட்டும்,  அவைவழி  நுணுக்கங்களையும் அவர்களின் நுண்ணறிவையும் எப்போதும் நம்மால் வியக்காமல் இருக்கமுடியாது. அவ்வகை இலக்கியங்கள் மதாச்சார்ய முக்கியத்துவம்  பெற்றபோதிலும், அறிவியல் சுரங்கமாய்