பதினொன்று பதிப்புகளைக் கண்ட வைரமுத்து அவர்களின் இந்த நூல், 15 தலைப்புகள் கொண்ட கட்டுரைகளை உள்ளடக்கியது.தலைப்புகளை வாசித்தாலே முழுதும் வாசிக்கும் ஆசை பிறக்கிறது. உங்கள் பார்வைக்காக தலைப்புகள்: 1.தமிழ் கூறு நல்லுலகு 2.எழுத்தும் எழுத்தாளரும் 3.புது கவிதையின் பாடுபொருள் 4.சந்திப்பும் சிந்திப்பும் 5.எனது பார்வையில் கண்ணதாசன், 6.பட்டிக்காட்டு குயில்கள் 7.தாமத ஞானம் 8.தெலுங்கு பாரதி 9.அந்தி மந்தாரைகள் 10.ஓ மனிதனே! 11.இவர்களை பிறப்பேனா? 12.கவி வாசகம் 13.பாரதியின் பின்புலங்கள் 14.கண்ணீரை சிரிக்க விடுவோம் 15.மாறும் யுகங்கள் மாறுகின்றன உயரம் சென்ற மனிதர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்காமல் நினைவு கொண்டு பகிர்வது அரிது. அவ்வாறு கூற வேண்டுமென்றால் சிலவற்றை பகிர்ந்து பலவற்றை மறைக்கும் நிலை வரும் என்பதால், பெரும்பாலானோர் அது குறித்து எழுத தயங்குவர்.இருப்பினும், இப்புத்தகம் ஆசிரியரின் வாழ்கை வரலாறு மட்டுமில்லாமல், சில சுவாரசிய சந்திப்புகளை, தான் கடந்து வந்த பாதைகளை, சந்தித்த மனிதர்களை, நேசித்த கருத்துக்களை, வியந்த சரித்திர நாயகர்களை வெளிச்ச...